என் வானின் வானவில் நீ - 3

  • 1

வானவில்-03செந்தாளம்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அம்மன் கோவில் திருவிழா முந்தைய வாரத்தில் தான் காப்புக் கட்டி இருந்தனர். தெருவை அடைத்து போடப்பட்ட பந்தலும் ஒவ்வொரு வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட வாழைமரமும் விழாக்கோலத்தை பறைசாற்றியது. மைக் செட் ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் வாகனங்களின் இரைச்சல். ஆனாலும் இதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியிருந்தது அவர்களுக்கு"திருவிழா களை கட்டிருச்சு" என்று சிலாகித்தபடி பத்மநாபன் இறங்க, பின்னோடே மலர்ந்த முகத்துடன் திரிபுரசுந்தரியும் இறங்கினார். 'பத்து அண்ணா வந்தாச்சு, வாங்க அண்ணி அத்தை சித்தப்பா மாமா! 'என்று ஒவ்வொரு உறவாக விளித்து வரவேற்பு கிடைக்க அதோடு பிள்ளைகளையும் ,'ஹேய் தேஜா ப்ரது அகிலே...!'என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர். ஒரு கூட்டமே குழுமியிருந்தது. சிலர் ஒதுங்கி தலையாட்டல் வரவேற்பு மட்டுமே அதில் யுகாதித்தியனின் அம்மாவும் ஒருவர். கோபத்தில் அல்ல எப்படி வரவேற்பது என்ற தயக்கத்தில். நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படி. பின்னர் பத்மநாபனே, "என்னம்மா நல்லா இருக்கியா எங்கே மாப்ள