என் வானின் வானவில் நீ - 2

  • 231
  • 57

வானவில்-02தேனி மாவட்டம் செந்தாளம்பட்டி கிராமம் (கற்பனை ஊர்) நோக்கி பயணித்தது பத்மநாபன் குடும்பம். பொதிகை எக்ஸ்பிரஸ் அவர்களை சுமந்து கொண்டு பயணித்தது. மதுரை சென்று பின்னர் தேனிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தனர் பத்மநாபனும் சுந்தரியும். மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டுத் தான் அடுத்து தேனிக்கு என்று உறுதிபட கூறியிருந்தார் சுந்தரி. வரும் போது திருப்பரங்குன்றம் பார்த்து விட்டு கிளம்புவதாக திட்டமிட்டு கிளம்பியிருந்தனர் குடும்பத்தோடு விடுமுறை கிடைக்கும் போது இப்படி சில கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். மகள்கள் இருவரும் வேலையில் இருக்க அனைவருக்கும் சேர்ந்து விடுமுறை கிடைக்காது. தனியாக விட்டு செல்லவும் மனதிருக்காது. அதிலும் அகிலன் இஞ்சினியரிங் சேர்ந்த திலிருந்து எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் தற்போது கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தி கொண்டனர். செல்லும் வழியெல்லாம் இளைய மகன் மகளுக்கு டூரிஸ்ட் கைடை போல இவ்விடம் அப்படி இப்படி என்று விளங்கிக் கொண்டிருந்தார் பத்மநாபன். அவர்களும் முதன் முறை கேட்பது போல சுவாரசியத்துடன்