பூஜா அப்பாவிடம் கிருஷ்ணன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டார். இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வரணுமா. இப்போதான் அருணுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தேன். எனக்கு சௌமியா மேம் மேல நிறைய நம்பிக்கை இருக்கு இருந்தாலும் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க பூஜா காலேஜ் ஸ்டாஃப்ஸ் கொஞ்சம் பெரு இருக்காங்க அவங்ககிட்டயும் பேசிட்டு சொல்லறேன், பூஜாவை என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன் நீங்க பயப்பட வேண்டாம் என்றார் கிருஷ்ணன். சிறிது நேரத்தில் டீ யும் ஸ்நாக்ஸ்ம் பூஜாவே கொண்டு வந்து கொடுத்தாள் . இருங்க டின்னர் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் பூஜா அப்பா. அதெல்லாம் பரவாயில்லை, நாங்கள் கிளம்புகிறோம் நீங்கள் எங்கள் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்றார் கிருஷ்ணன். வீட்டை விட்டு வெளியே வந்ததும் அருணுக்கு ஃபோன் செய்தாள் சௌமியா . விஷயத்தை சொன்னாள். ரொம்ப தாங்க்ஸ் மேம் என்றான். கிருஷ்ணன் பிரதீபா சௌமியா மூவரும் இரவு 11 மணி