நெருங்கி வா தேவதையே - Part 31

  • 165

தீபாவளி அன்று மதியம் 12 மணி போல கிருஷ்ணனும் பிரதீபாவும் சௌமியா வீட்டுக்கு வந்தார்கள். சௌமியா அவர்களை வரவேற்றாள். பிரதீபா புதிய உடையில் நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தாள். பிறகு என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே என்று சொல்லிக்கொண்டாள் . இருங்க ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள். அதுக்கெல்லாம் என்ன அவசரம் ராகவ் அண்ணா ரஷ்மி அக்கா எங்கே என்றாள் பிரதீபா. அவர்கள் அவர்களுடைய மியூசிக் மாஸ்டரை பார்க்க போயிருக்கிறார்கள் . சரி நான் அவர்களுக்கு ஃபோன் பண்ணி பார்க்கிறேன் என்றாள் பிரதீபா. வேண்டாம் என்று கிருஷ்ணன் தடுப்பதற்குள் ஃபோன் செய்து விட்டாள். எங்கே இருக்கீங்க அண்ணா இங்கே சௌமியா ஆண்ட்டி வீட்டுக்கு நானும் அப்பாவும் வந்திருக்கோம் உடனே வாங்க என்றாள் . சரி வருகிறோம் என்றான் ராகவ். அருணுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பூஜா வீட்டில் தீபாவளி . பூஜா வீட்டினர் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை.