பூஜா கான்செர்ட்டை பார்க்க ஆவலாய் இருந்தாள். ராகவும் நிறைய உழைத்திருந்தான்நிகழ்ச்சிக்காக.கிருஷ்ணனும்,பிரதீபாவும் சற்று முன்பே காலேஜ் அரங்கிற்கு வந்துவிட்டார்கள். கூட்டம் நிறைய இருக்கும என்பதால் சுகன்யா நெர்வஸ் ஆக இருந்தாள். ஒன்றும் பயப்படாதே சுகன்யா இது ஒரு வகையான சேலஞ் அவ்வளவுதான் என்றாள் சௌமியா.கிருஷ்ணனையும், பிரதீபாவையும் கூல் டிரிங்க்ஸ் குடுத்து வரவேற்றாள் தென்றல். தென்றல் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டாள். ராகவ் அண்ணா சொல்லி இருக்காரு உங்களைப்பத்தி என்றாள் பிரதீபா. அருணும் சற்று பதட்டமாகவே இருந்தான். என்ன கலாட்டா நடந்தாலும் பொறுமையா இருங்கள் ஜோ, ராகவ் என்றான். ஆடியன்ஸ் கலாட்டா செய்வார்களா என்றாள் ரஷ்மி. நிச்சயமாக நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றான் அருண்.நிகழ்ச்சி துவங்கும் முன் சௌமியா இரண்டு நிமிடம் பேசினாள். கான்செர்ட் பார்க்க குமாரும் காலேஜ் வந்திருப்பதாக சௌமியாவுக்கு யாரோ சொன்னார்கள். நிகழ்ச்சி ஒரு புறம் நன்றாக துவங்கியது. மறுபுறம் ஒரு குறிப்பிட்ட குழுவினர் கமெண்ட் அடித்த வண்ணம் இருந்தனர். அருண்