இட்ஸ் அ நியூ பிகினிங் என்று ஒரு புதிய வீட்டின் புகைப்படத்தை போட்டு ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருந்தாள் சௌமியா. இதை பார்த்த ராகவ் அதிர்ச்சி அடைந்தான். சௌமியாவுக்கு ஃபோன் செய்தான் என்னாச்சு மேம் ஸ்டேட்டஸ் அப்டேட் பார்த்தேன் என்ன புது வீட்டுக்கு போகிறீர்களா என்றான். ஆமாம் ஆனால் நான் மட்டும்தான் என்றாள். சரி நான் வந்து பேசுகிறேன் லொகேஷன் அனுப்புங்கள் என்றான். ஒண்ணும் பிரச்சனையில்லை நீ நிதானமாகவே வா என்றாள். சௌமியா வீட்டில் பழைய வீட்டு சாமான்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்த ராகவ் உதவி செய்தான். இது ஒரு நாளில் முடிகிற வேலை இல்லை ராகவ் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ என்ன சாப்பிடுகிறாய் என்றாள் . டீ போதும் மேம். சரி கொஞ்ச நேரம் ஆகும் பரவாயில்லையா ? சரி மேம். அவள் கிச்சன் உள்ளே சென்றாள். குமாரும் சௌமியாவும் சேர்ந்து எடுத்த திருமண போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான்