சரி பூஜா நான் கிளம்பட்டுமா என்றான் அருண் . என்ன அவசரம் இப்போது தானே வந்தாய் இரு சாப்பிட்டுவிட்டு சாயங்காலமாக போகலாம் என்றாள் பூஜா. பூஜா எப்பவுமே நீ என் கூட இருப்பாயா? நான் எப்பவும் உன் கூடத்தான் இருக்கிறேன் உனக்கு தான் என்னை தெரியவில்லை.மதியம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். பூஜா சௌமியா பற்றி விசாரித்தாள். அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏன் ஒரு மாதிரி இருக்கிறார் என்று கேட்டாள். எனக்கும் தெரியவில்லை நானும் கேட்டுப்பார்த்தேன் சௌமியா மேம் பதில் சொல்லவில்லை என்றான். ஜோ போன் பண்ணி இருந்தான் என்ன மச்சான் போயிட்டு போனே பண்ணல என்றான். அதெல்லாம் ஒன்னும் இல்ல பூஜாவுக்கு இப்ப பரவாயில்ல அவ கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியல. ம் நீ நடத்து மச்சி கிளம்பும்போது எனக்கு போன் பண்ணு என்றான்.ஈவினிங் நாலு மணிக்கு கிளம்பி விட்டான் அருண். என்னை மறந்து விடாதே என்றாள் பூஜா.