பூஜாவின் வருகைக்காக எல்லோருமே காத்திருந்தனர். அருண் சற்றே நெர்வஸ் ஆக இருந்தான். எல்லோருக்கும் தங்குவதற்கு அறை ஒதுக்கீடு செய்து கொடுத்தாள் சௌமியா. ஊட்டி குளிர் மிதமாக இருந்தது. எப்படியோ வெந்நீரில் குளித்துவிட்டு ரெடி ஆகி அருணுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. என்ன அருண் ஏற்கனவே டிரைன் லேட் நாம் சீக்கிரமாக பிராக்டிஸ் துவங்க வேண்டும் என்றாள். நிச்சயமாக என்றான். ராகவ் தயாராகி வெளியே வந்து ரிசப்ஷன் அருகே நின்று கொண்டிருந்தான். ரஷ்மி வரும் முன் அவளுக்கு ஏதாவது போக்கே வாங்க வேண்டுமென்று நினைத்தான். ரிசப்ஷன் பெண்ணிடம் விசாரித்து அருகில் இருந்த கடையில் போய் போக்கே வாங்கி வந்தான். எங்கே போய் தொலைந்தாய் என ரஷ்மி போனில் திட்டிய போது இதோ வந்து விட்டேன் என்றான். போக்கேவை நீட்டியபோது ரஷ்மி ரொம்பவும் மகிழ்ந்து போனாள். சரி வா பயிற்சிக்கு நேரமாகிவிட்டது அதோடு அருண் நமக்காக காத்திருப்பான் என்றாள். ரஷ்மி, ராகவ், அருண், ஜோ