நெருங்கி வா தேவதையே - Part 19

  • 198

ஊட்டி ட்ரிப்புக்கு தென்றலையும் அழைத்து போகலாம் என ஜோ சொன்னான். சௌமியா யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாள். பூஜா வருவது உறுதியாகிவிட்டது, அவளுடைய காலேஜில் பர்மிஷன் கொடுத்து விட்டார்கள்.சௌமியா பூஜாவிடம் பேசினாள். ரொம்ப சந்தோஷம் பூஜா பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருக்கணும் அதுதான் முக்கியம் என்றாள் . சரி மேம் . ரஷ்மி, ராகவ் அவர்களுடைய மியூசிக் குருவை சந்தித்தனர் என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளையே காணோமே என்றார் ரஷ்மியை பார்த்து. கொஞ்சம் படிப்பையும் பார்க்கணும் இல்ல மாஸ்டர் அதுதான் வர முடியல என்றாள். பரவாயில்ல பரவாயில்ல நான் சும்மாதான் கேட்டேன். ராகவ் எப்படி கற்றுகொள்கிறான் மாஸ்டர் என்றாள் ரஷ்மி. ம் நன்றாகத்தான் போகிறது ஆனால் வெரைட்டி வேண்டும் அப்போதுதான் கிரியேடிவிட்டி வெளிப்படும் என்று சொன்னார். புரிகிறது மாஸ்டர் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று ராகவ் சொன்னான். நாங்கள் அடுத்த ட்ரிப் ஊட்டி போகிறோம் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்றான் ராகவ்