எப்போதும் போல ரிகர்சல் முடிந்ததும் எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்வது தி ஈகிள்ஸ் பாண்டின் வழக்கம், அன்றும் எல்லோரும் பேசினார்கள். ஜோ வழக்கம் போல குறும்பாக பேசினான். ரஷ்மியும், அருணும் அடுத்த கட்டத்துக்கு தங்கள் பாண்டின் இசையை எடுத்து செல்வதை பற்றி பேசினர் .சுகன்யா பேசும் முறை வந்ததும் தயங்கினாள். நீ எதுவானாலும் தயங்காமல் சொல்லு என்றான் ராகவ். என்னை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்றாள் சுகன்யா. நான் மியூசிக் பாண்ட் விட்டு விலகுகிறேன் என்றாள். என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தென்றலுக்கும், சௌமியாவுக்கும் கூட புரியவில்லை. சுகன்யாவே தொடர்ந்து பேசினாள். நான் தனியாக ரிகர்சல் வருகிறேன் தனியாகவே போகிறேன் என்னிடம் யாரும் பேசுவதில்லை என்றாள். சௌமியா நாம் இது பற்றி பேசலாம் அதற்காக பாண்ட் விட்டு விலகுவது பெரிய முடிவு என்றாள். நீங்கள் தான் பூஜாவை பாட வைக்கிறீர்களே என்றாள். அதுதான் உன் வருத்தம் என்றால்