நெருங்கி வா தேவதையே - Part 15

  • 180

பூஜா தன்னை அந்த கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவி என அறிமுகபடுத்திக்கொண்டாள் . பழகிய கொஞ்ச நேரத்திலேயே அவளுடைய இசை ஆர்வம் பற்றி அருண் வியந்தான் . நான் போய் தயாராகி வருகிறேன் என்று பூஜா கிளம்பிவிட்டாள். இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுகன்யா சிறப்பாக பாடினாள். சௌமியாவும் ரஷ்மியும் மகிழ்ந்து போனார்கள். ஜோ அவளை பாராட்டினான். ராகவும்,அருணும் பூஜா பாடுவதையே மெய்மறந்து கேட்டனர். நிகழ்ச்சி முடிந்த மறுநாள் திருச்சியை சுற்றி பார்க்க எல்லோரும் கிளம்பினர். என்ன காரணத்தாலோ தென்றல் ராகவுக்கு ஃபோன் பண்ணவில்லை. ராகவும் அவளுக்கு ஃபோன் பண்ணவில்லை. பூஜாவையும் சுற்றி பார்க்க அழைத்தாள் சௌமியா. முதலில் தயங்கினாலும் அப்புறம் வருகிறேன் என்று சொன்னாள் . திருச்சியில் அவளுக்கு பரிச்சயமான இடங்களுக்கெல்லாம் அழைத்து சென்றாள். மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு போன்ற இடங்களுக்கு போனார்கள். எல்லோரும் சேர்ந்து ஷாப்பிங் போனார்கள். பூஜாவை எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது. பூஜாவை தன்னுடைய