நெருங்கி வா தேவதையே - Part 14

  • 636
  • 240

பிரதீபாவிடம் இருந்து விடை பெற்றுகொண்டனர் ராகவும், ரஷ்மியும். மியூசிக் மாஸ்டர் ராகவ் மேடையில் பாடுவதற்கு சில உத்திகளை ராகவுக்கு சொல்லித்தந்தார். திருச்சி என்றதும் மலைக்கோட்டை நினைவு வந்தது எல்லோருக்கும் . திருச்சியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. சௌமியா அதற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். தென்றலை அவள் அப்பா போக வேண்டாம், நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லிவிட்டார். அதனால் அவள் வரவில்லை. ரஷ்மிக்கு ஒரு புறம் தென்றல் இல்லாதது நிம்மதியாய் இருந்தது, மறுபுறம் தான் உரிமையுடன் ராகவ் கூட இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்திருந்தது. ராகவ் ஓரளவு நல்ல மார்க் வாங்கியிருந்தான். சௌமியாவுக்கு நன்றி சொன்னான்.நீங்கள் சொல்லிக்கொடுக்காவிட்டால் நான் பெயில் ஆகி இருப்பேன் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்படியும் ரஷ்மி உன்னை பாசாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாள் என்றாள். ம் நீங்கள் அவளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று தெரியும் என்றான். ஜோ