நெருங்கி வா தேவதையே - Part 11

ரஷ்மி எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அதற்குமேல் சௌமியாவும் எதுவும் கேட்கவில்லை. சுகன்யாவிடம் ரஷ்மி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள். எப்படியோ ரஷ்மி தான் நினைத்ததை சாதித்து விட்டாள். சௌமியாவிடம் விடை பெற்றுக்கொண்டாள் ரஷ்மி. அவள் மனம் முழுக்க ராகவ் பாடிய பாட்டுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. தன்னால் தன்னை மீறி எதுவும் செய்யமுடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது அவளுக்கு . ராகவ் நைட் ஃபோன் பண்ணியிருந்தான். ரொம்ப தாங்க்ஸ் ரஷ்மி என்றான் . எதுக்குடா தாங்க்ஸ் எல்லாம் சொல்லுற. நீ மட்டும் சப்போர்ட் பண்ணாம போயிருந்தா இந்நேரம் நான் என்னவோ ஆயிருப்பேன் என்றான். டேய் உன்னை எனக்கு பிடிக்கும்டா உனக்காக எப்பவும் சப்போர்ட் பண்ணிக்கிட்டுதான் இருப்பேன் என்றாள். ம் எல்லாம் வெறும் பேச்சுதான் என்றான் ராகவ். சரி அந்த கிருஷ்ணன் பொம்மை என்ன பண்ணின? அதை என் பெடரூம் ல வெச்சி இருக்கேன். டேய் அது சாமி சிலை டா... இருக்கட்டும் என் கூடவே