இதெல்லாம் நல்லா பேசு ஆனா என்னை விரும்புறியா அப்படின்னு கேட்டா ஒண்ணும் சொல்லாதே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அந்த சந்தோஷ சூழ்நிலையை மாற்ற விரும்பாமல் அவள் எண்ணம் போலவே நடந்து கொள்ள தீர்மானித்தான். ரஷ்மி வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். செம திட்டு விழுந்ததாக சொன்னாள். உனக்காக இதையும் தாங்கிப்பேன் என்றாள். பழங்களை பாட்டியிடம் கொடுத்தாள். உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.தாங்க்ஸ் என்றான் ராகவ். கொஞ்ச நேரம் கேம்ஸ் விளையாடினார்கள். இங்கே அடிக்கடி கரண்ட் கட் ஆகும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க ரஷ்மி என்றார் பாட்டி. சரி பாட்டி. அவர்கள் கொஞ்ச நேரம் மியூசிக் பற்றி பேசினார்கள். இரவு என்ன சமைக்கட்டும் என்றாள் பாட்டி . வா ராகவ் நாமே போய் சமைக்க தேவையானவற்றை வாங்கி வருவோம் என்றாள் . சப்பாத்தி ஓகே வா என்றாள். ம் நானே பண்ணி தருகிறேன் என்றாள். எனக்கு பயமாயிருக்கு என்றான்.