நெருங்கி வா தேவதையே - Part 8

அருண் எதிர்பார்த்திருந்தது போல ராகவ் கொஞ்சம் போல வித்தியாசத்தில் பெயில் ஆகி விட்டிருந்தான் . தென்றலும், ரஷ்மியும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராகவை சமாதானப்படுத்தினர். அருண் உள்ளுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் நிரம்பியவனாக அடுத்த வருடம் நாம் மீண்டும் முயற்சிப்போம் என்றான். சௌமியாவும், sponser செய்பவரும் அதையே கூறினார்கள். ராகவ் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். அவனுடைய முகம் கறுத்து போய் இருந்தது. இனி எப்படி ரஷ்மியின் முகத்தில் விழிப்பது என்பதே அவனுடைய கவலை ஆக இருந்தது . எக்ஸாம்ஸ் முடிந்து கல்லூரி 15 நாட்கள் விடுமுறை விட்டு இருந்தனர். யாருடைய ஃபோன் காலையும் அட்டென்ட் செய்யாமல் இருந்தான். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று தன் பாட்டியுடன் தங்க முடிவெடுத்தான் ராகவ். ரஷ்மி சௌமியா அவனை சந்திக்க சொன்னதாக மெசேஜ் அனுப்பியிருந்தாள் . சௌமியா மேம் அவனை எதுவும் கேட்கவில்லை நாம வேணா மியூசிக் மாஸ்டர் மாத்தி பார்ப்போமா என்றாள்.