ரஷ்மி தன் மனதில் இருந்த சலனங்களை போக்க இசையில் கவனம் செலுத்தினாள் .அருண் அதற்கு உறுதுணையாய் இருந்தான்.தென்றலோ ராகவ் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா என்ற சந்தேகத்தில் இருந்தாள். சொன்ன மாதிரி 15 ம் தேதி மியூசிக் பாண்ட் sponser செய்வதாக கூறியவர் காலேஜ் வந்துவிட்டார். சௌமியா அவரை வரவேற்றாள். ஓரளவு நன்றாக பிராக்டிஸ் செய்து இருந்த படியால் அவருக்கு திருப்தியாய் இருந்தது. ரஷ்மிக்கு புதிய நம்பிக்கை வந்திருந்தது. சௌமியா மியூசிக் பாண்ட் மெம்பர்களை வந்தவருக்கு அறிமுகபடுத்தி வைத்தாள். ஏன் ராகவ் நீ பாட மாட்டாயா என்று கேட்டார். இல்லை இல்லை எனக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் என்றான் அவசரமாக. நீயும் இந்த பாண்டில் இருந்தால் எனக்கு சந்தோஷம் என்றார். நான் யோசிக்கிறேன் சார் என்றான். ரஷ்மி முகம் மலர்ந்தது. நீ மியூசிக் பாண்டில் சேர்வது பற்றி எல்லோருக்குமே சந்தோஷமாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறேன் என்றார். தென்றல் நீயும் பாண்டில் சேர்ந்து கொள் என்று சொன்னாள்.