ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை. ரஷ்மியின் மனதிலும்,ராகவின் மனதிலும் குழப்பமான சூழ்நிலையே இருந்தது. அன்று மாலை ரஷ்மியின் மியூசிக் பாண்ட் ஒத்திகை நிகழ்ச்சியை காண போயிருந்தான் ராகவ் கூடவே ஜோவும் தென்றலும் வந்திருந்தார்கள். ஒத்திகை என்றாலும் சிறப்பாக இருந்தது. அருண் அருமையாய் மியூசிக் compose செய்து இருந்தான். ரஷ்மி பாடிய விதமும் அருமையாய் இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னான். தென்றலும் பாராட்டினாள் .ஏன் ரஷ்மி கோவிலுக்கு வரவில்லை என்றான். தென்றல் இப்போதெல்லாம் என்னை எங்கும் கூப்பிடுவதில்லை என்றாள் ரஷ்மி. நீ அதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றான். நாளைக்கு சௌமியா மேடம் வருவார்கள் மதியம் 2 மணிக்கு ட்ரீட் கொடுப்பதாக சொல்லி இருக்கிறாய் நினைவு இருக்கிறது அல்லவா என்றாள். நன்றாக நினைவு இருக்கிறது. நான் எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டேன். மதியம் ஒரு மணிக்கெல்லாம் நான் அங்கு இருப்பேன் . நீ மேடத்தை 12 30 போல ஃபோன் செய்துவிட்டு பிக்அப் செய்து கொள்