நெருங்கி வா தேவதையே - Part 4

  • 276
  • 111

ராகவ் தென்றலுடன் நிதானமாகவே பழகினான். அவளும் அவனை புரிந்து கொண்டாள் . ஆனால் இவர்களுடைய புரிதல் ரஷ்மிக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் தன்னை தயார் படுத்திக்கொண்டாள். ஜோவும் , அருணும் நடப்பதை கவனித்து வந்தனர். ஒரு புறம் படிப்பு மறுபுறம் நட்பும் , காதலும் இரண்டையும் பேலன்ஸ் செய்வது கஷ்டம்தான். அப்போதுதான் ரஷ்மி மியூசிக் பாண்ட் ஒன்றை துவங்குவதாக முடிவெடுத்து இருந்தாள். மெம்பர்களை சேர்க்கும் பணியில் இறங்கி இருந்தாள். ராகவுக்கு மியூசிக் மீது இஷ்டம் தான் ஆனால் அனுபவம் இல்லை. அருணுக்கு அதில் நல்ல ஆர்வம் இருந்தது. அருணை சேர்த்துக்கொண்டாள் ரஷ்மி கூடவே சுகன்யாவையும் சேர்த்து கொண்டாள். காலேஜில் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அரேஞ்ச் செய்து தருவதாக சொல்லி இருந்தார்கள். ஜோவும் ராகவும் கிரிக்கெட்டில் மூழ்கி கிடந்தார்கள். மியூசிக் பாண்ட் துவங்கும் நாளையொட்டி எல்லோரையும் வர சொல்லி இருந்தாள். சிறிய இசை அறிமுகம் ஒன்றை அருண் செய்தான். அருணை நினைத்தால் பெருமையாக