அருண் போனை எடுக்கவில்லை. 10 நிமிடம் கழித்து கூப்பிட்டான். என்னாச்சு என கேட்டான் அருண் ஒண்ணுமில்லை ரஷ்மிக்கு ஃபோன் பண்ணினேனா ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஓ அதுவா நாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வந்திருக்கிறோம் அவளுக்குத்தான் பக்தி அதிகம் ஆச்சே அதுதான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா என்றான். நான் அவ கிட்டயே போனை குடுக்குறேன் பேசு என்றான். என்ன கல்யாண பார்ட்டி எப்படி போகுது என்றாள். ம் நல்லாத்தான் போகுது . உன்னைய மிஸ் பண்ணுகிறோம் என்றான் . நானும் தான் உன்னைய மிஸ் பண்ணுறேன் என்றாள். அருண் மறுபடி வாங்கி பேசினான். இப்போதான் கோவில் வரைக்கும் வந்துருக்கோம் இனிமே ஃபோன் பண்ணாதே ராகவ் பிளீஸ் என்றான். எதற்காக ரஷ்மியின் நினைப்பு திடீரென வாட்டி எடுக்கிறது என புரியவில்லை. சீக்கிரம் கிளம்பி போய் அவளை பார்த்தால் தேவலை என்று இருந்தது. அவள் சொன்ன பொருட்களை கன்யாகுமரியில் வாங்கிகொண்டான். ஜோ