நெருங்கி வா தேவதையே - Part 2

  • 327
  • 120

சௌமியா மேம் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல கூட இல்லை. ரஷ்மி எப்படி போகிறது சௌமியா மேம் கிளாஸ் என விசாரித்தாள். நன்றாகத்தான் போகிறது. இப்போது லேசாக தன்னம்பிக்கை வந்திருக்கிறது என்றான். வெரி குட் என்றாள். அடுத்த வாரம் தென்றலின் பர்த்டே வருகிறது நாங்கள் சிம்பிள் ஆக ஒரு ரெஸ்டாரன்ட் புக் செய்துள்ளோம் நீயும் வர வேண்டும் என்றாள். ஜோவும், அருணும் கூட வருகிறார்கள் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் என்றாள். அது ஒரு சண்டேவாக இருந்தது. தென்றலுக்கு என ஒரு கிப்ட் ஜோ, அருண், ராகவ் மூன்று பேரும் சேர்ந்து வாங்கினார்கள். தென்றலுக்கு ரொம்ப சந்தோஷம். சௌமியா மேம் வந்திருந்தார்கள். அவர்கள் வருகையை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தாள் ரஷ்மி. என்னப்பா என்ன பார்த்ததும் freez ஆகி விட்டீர்கள் நானும் சின்ன பொண்ணுதான் என சிரித்தாள். எல்லோரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்கள். கேக் வெட்டினாள் தென்றல். அவள் ஜோவுக்கு முதலில்