நெருங்கி வா தேவதையே - Part 1

  • 282
  • 78

ரஷ்மிக்கு அன்று இரவு தூக்கம் இல்லை. மறுநாள் இன்ஜினியரிங் காலேஜ் சேரப்போவதை நினைத்து அவளுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளுடைய சிறு வயது கனவாக இன்ஜினியரிங் இருந்தது. அவளுடைய தோழிகள் சுகன்யாவுக்கும்,தென்றலுக்கும் அதே வகுப்பில் இடம் கிடைத்தது ரஷ்மிக்கு கூடுதல் மகிழ்ச்சி. மறுநாள் காலையிலேயே தென்றலும், சுகன்யாவும் ரஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். என்ன ரஷ்மி நைட்டெல்லாம் தூங்கலியா என்றாள் தென்றல். ஹேய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்பலாமா என்றாள் . அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் ரஷ்மி. ரஷ்மி காலேஜ் பஸ்சில் போவதாய் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள் . பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா என்றனர். ஹேய் உனக்கு தெரியுமா லாஸ்ட் சமயத்துயல அருணும் நம்ம கிளாஸ் ல ஜாயின் பண்ணியிருக்கானாம் என்றாள் சுகன்யா. நேத்து நைட் ஃபோன் பண்ணினான். நம்ம கூட ஸ்கூல் படிச்ச அருணா ஆமாம் அவனேதான். அவன் இருக்குறது ஒரு வகையிலே