சூரியா என்ற பெயரை கேட்டவுடன் துள்ளி குதித்தாள் ரம்யா. அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பெயர் சூரியநாராயணன் சுருக்கமாக சூரியா. முழு பேர் பழையதாய் இருந்தாலும் இந்த சூரியா என்கிற பெயர் அவளுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. நேரில் சந்தித்து பேசலாம் என குடும்பத்தார் முடிவெடுத்தார்கள். போட்டோவில் பையனும் அவ்வளவு மோசமாக தெரியவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிலில் வைத்து சந்திக்கலாம் என பேசி வைத்தார்கள். பையனை கம்பேர் பண்ணும் போது இவள் சுமாராக இருப்பதாக குடும்பத்தார் மனதில் தோன்றியது. அதை சொல்லவும் செய்தார்கள். பையனுக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் . நல்ல உத்தியோகம், கை நிறைய சம்பளம். உடன் பிறந்தவர்கள் இல்லை. ஸ்டைல் ஆக தான் அவனோடு காரில் செல்லும் காட்சியை நினைத்து பார்த்து மகிழ்ந்தாள் ரம்யா. அதெல்லாம் முக்கியமில்லை அதையும் தாண்டி சில விஷயங்கள் இருப்பதாக அவளுடைய ஃப்ரெண்ட் தீபிகா சொல்ல ஆமாண்டி அதுவும் வேணும் என்று ரம்யா