ஸ்வாமிநாதன் என்கிற ஸ்வாமிக்கு எழுதுவதுதான் பொழுதுபோக்கு . எதையாவது எழுதி கொண்டிருப்பான். துணுக்குகளோ ,சிறுகதைகளோ இல்லையெனில் ஒரு நாவல் எழுத போவதாக சொல்லி கொண்டிருப்பான். அவனுக்கு பிரவீன் என்றொரு நண்பன் இருந்தான். ஸ்வாமிக்கு திருமணமான வேகத்திலேயே விவாகரத்தும் ஆகிவிட்டது . பிரவீனுக்கு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள். அவன் அரசாங்க உத்தியோகஸ்தன். எப்போதும் போல 6 மணிக்கு பிரவீன் வீட்டு வாசலுக்கு வந்து விட்டான் ஸ்வாமி. பிரவீனுடைய அம்மாவுக்கு ஸ்வாமியின் எழுத்துக்கள் என்றால் இஷ்டம். வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்தவள் அவன் வர நேரம்தான் செத்த உள்ளே வந்து உட்காரு என்றாள். பிரவீன் மனைவிக்கோ எழுத்து என்றாலே அலர்ஜி . கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவள். காபி போடட்டுமா ஸ்வாமி என்றாள் பிரவீன் அம்மா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா நான் வேணா போயிட்டு அப்புறம் வரவா என்றான். சொல்லி முடிப்பதற்குள் பிரவீனும் அவன் மனைவி ஷெரினும் வந்து சேர்ந்தார்கள். எப்படா வந்தே இப்போதான்டா