இருளும் ஒளியும்

  • 450
  • 171

இரவு முழுக்க யோசித்தும் அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை. ஏதேதோ யோசித்தும் கல்பனாவின் நினைவாகவே இருந்தது. கல்பனா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் என்பதே சதா அவனுடைய யோசனை ஆக இருந்தது. 25 வருடங்களுக்கு முன் கூடப்படித்தவள் இப்போது எப்படி இருப்பாள் என்பது ஒரு தேவையில்லாத கேள்வி. இத்தனைக்கும் பின் எந்த ஒரு காரணமும் இல்லை. அவள் இவனிடம் பேசியது கூட இல்லை. என்னவோ அவளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒரு நாள் தீடீரென காயத்ரி ஏதோ உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்தது இவனை ரொம்பவும் பாதித்தது . காயத்ரியின் இறுதி சடங்கிற்கு போயிருந்தான். அவளுடைய பிள்ளைகள் இவனை விசாரித்து சற்று முன்னதாக வந்திருந்தால் அம்மா சந்தோஷப்பட்டு இருப்பாள் என்றனர். ஏதோ ஒன்றுக்காக எல்லோருமே இறுதிக்கட்டத்தில் ஏங்குகின்றார்கள், அது காட்டப்படாத அன்புக்காக இருக்கிறது. எப்படியாவது கல்பனாவிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவள்