சினேகாவும் புத்தகமும்

  • 351
  • 141

ஸ்னேகாவுக்கு புத்தகங்கள் என்றாள் உயிர் . அவளுக்கு படிக்காவிட்டால் எதையோ இழந்ததாய் உணர்வாள். விதவிதமான புத்தகங்கள் அவளுடைய அலமாரியை அலங்கரித்தன. அதில் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் சிலவற்றை அவள் மறைத்து வைப்பதும் உண்டு. அவள் காதல் வயபட்டதும் கல்யாணம் முடித்ததும் அவளுடைய உலகமே மாறிவிட்டது. முன்னை போல அவளுக்கு படிக்க நேரமில்லை. திருமணமாகி ஹனிமூன் போய் வந்ததும் தன்னையே தான் இழந்து விட்டு ராகவனுக்காக வாழ்வதாய் நினைத்தாள். இருவரும் வேலைக்கு போய் வந்தனர். ராகவனுக்கு சினிமா என்றாள் உயிர். அவன் ஒரு உலக சினிமா பைத்தியம். ஏதேதோ மாற்று மொழி படங்களும் அவற்றின் subtitleகளுமே கதியென்று கிடப்பான். ராகவன் இவளை சந்தித்ததே ஒரு டிவிடி கடையில்தான். ராகவன் வெளியில் மாடர்ன் ஆக இருப்பது போல இருந்தாலும் உள்ளுக்குள் பழமைவாதி. அவனுக்கு வீட்டில் எல்லாமே சவுகரியம் செய்து கொடுக்க வேண்டும் . ஸ்னேகாவின் நேரத்தை எல்லாம் காலாட்டிக்கொண்டே கபளீகரம் செய்வான். ராகவனும் ஸ்னேகாவும்