இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றாள் ஷெரின் . உன் அப்பா உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை இப்போது பயணம் செய்யும் நிலையில் இல்லை. அதனால்தான் அவரை அழைத்துக்கொண்டு வர முடியவில்லை என்றான் சிவா. ஆனந்த் தலைமறைவு அதிகாரிகளுக்கு பெரிய தலைவலி கொடுத்தது. கிரண் ஆனந்திற்கு எதிராக செயல்பட முடிவு செய்தான். எழிலை சந்திக்க விரும்புவதாக சொன்னான். எழில் இப்போவாவது உனக்கு தோன்றியதே என்றான். கிரண் இப்போது ஆனந்த் பெங்களூர் அருகே பதுங்கி இருப்பதாக சொன்னான். அவனால் போலீஸ் கெடுபிடியால் வெளிநாடு போக இயலவில்லை என்றும் சொன்னான். அவன் சமீபத்தில் தன்னை தொடர்பு கொள்ளவில்லை தான் அவன் குடுத்த நம்பரில் முயற்சி செய்த போதும் அவன் போனை எடுக்கவில்லை என்றான். எழிலும் ஷிவானியும் பெங்களூர் பயணம் செய்ய தயார் ஆயினர். கிரணையும் அழைத்து செல்லலாம் என நினைத்தபோது ஆனந்தால் கிரண் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் தவிர்த்துவிட்டான். ஷெரினின் தண்டனை