ஒரு நாளும் உனை மறவேன் - Part 22

போனை பதட்டத்துடன் அட்டென்ட் செய்தான் சிவா . என்ன சிவா ஸ்வேதாவை காணுமா அவள் இப்போது என் பிடியில் தான் இருக்கிறாள். நாங்க கொஞ்ச நாளிலே வெளிநாடு போகப்போகிறோம் அதனால நீ என்ன பண்ணுற இந்த விஷயத்தை ஷிவானி கிட்ட சொல்லி ஏதாவது தடுக்க முடிஞ்சா தடுத்து பாரு என்றான் ஆனந்த் . இதற்கிடையில் ஸ்வேதாவை ஆபீசில் இருந்து அழைத்துகொண்டு வந்த வண்டி தாம்பரம் பக்கத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. அதன் டிரைவர் அருகிலேயே மயங்கி கிடந்தான். அவனை விசாரித்த போது யாரோ இரண்டு பேர் காரிலே வந்ததாகவும் அட்ரஸ் கேட்பது போல நடித்து இவனை தாக்கிவிட்டு ஸ்வேதாவை கூட்டி சென்று விட்டதாகவும் தெரிவித்தான். ஷிவானி அவனை ஹாஸ்பிடல் செல்லுமாறு கூறினாள் . சிவா சொல்லியதை கேட்ட ஷிவானி நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க சிவா அவன் சும்மா பூச்சாண்டி காட்டுறான் என்றாள். விஷயத்தை கேள்விப்பட்ட எழில் கிரணுக்கு ஃபோன் செய்தான். கிரண்