எழில் நிதானமாக நடந்தவற்றையெல்லாம் யோசித்து பார்த்தான். முதலில் கமலன் கொலை பிறகு நிர்மலா அப்புறம் யாழினி.குமார் இன்னும் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஆனந்த் தப்பி ஓடிவிட்டான். கிரணை நம்பி பிரயோஜனம் இல்லை. அவன்தான் ஆனந்தை தப்ப வைத்தவன். இப்போது எழிலும் சஸ்பெண்ட் ஆகிவிட்டதால் அவனுடைய ஆட்டம் இன்னும் அதிகரிக்கும். ஷிவானி அவனை ஆறுதல் படுத்துவது போல அணைத்துக்கொண்டாள். எழில் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் ல இரு. என்ன ஷிவானி சொல்லுறே ஆனந்த் வெளியே இருக்குறது எவ்வளவோ பேருக்கு ஆபத்து தெரியுமா ? என்றான். புரியுது எழில் அதுக்காக நாம சட்டத்தை கையிலெடுத்து விட முடியுமா என்றாள் . நீ கிரணை குளோஸ் ஆக ஃபாலோ பண்ணு என்றான் எழில். பண்ணுறேன் எழில் . குமார் வேறு ஜாமீனில் வெளிவந்து விட்டான் அவன் என்னென்ன செய்ய போகிறானோ என்றான் எழில். சிவாவும் நரேஷ்,உதித் உடன் இதை பற்றி ஆலோசித்தான்.