நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. நிர்மலா கொலை சம்பந்தமாக யாராவது தவறாக வழி நடத்தினால் உடனே அவர்களை பின் தொடருகிற பக்குவத்துக்கு வந்திருந்தான். ஷிவானி அதை எப்படியோ அறிந்திருந்தாள். நரேஷ் எதையாவது ஏடாகூடமாக செய்து வைக்குமுன் அவனை அதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஷிவானியின் நோக்கமாக இருந்தது. இதற்கிடையில் உதித் அவ்வப்போது தனியாக ஷெரினை சிறைக்கு சென்று சந்தித்து வந்தான். ஷெரின் அவனை பக்குவப்படுத்தினாள் . கிரண் நரேஷை கடத்த திட்டமிட காரணமும் அதுதான். அவன் ஒரு எளிய இலக்காக இருந்தான். கிரண் அவ்வப்போது நரேஷ் உடன் பேசி வந்தான். அவன் குமாரை கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக போலியான வாக்குறுதிகளை நரேஷ் மனதில் பதிய வைத்தான். குமாரை எழில் விசாரிக்க தொடங்கினான். குமார் பிடி கொடுக்காமல்