எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ மிரட்டி நிர்மலா கொலையில் பங்கு பெற செய்திருக்கிறார்கள் என்றான் எழில். சௌமியா அமைதியாய் இருந்தாள். இந்த அமைதிக்கு என்ன அர்த்தம் மேடம். நான் எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன் இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என்றாள். எழில் கிரணை சந்தித்தான். என்ன ஆனந்த் அமெரிக்கா போகிறானாமே என்றான் . ம் உனக்கும் தெரிந்துவிட்டதா ஆனந்த் உன்னை சந்திக்க விரும்புகிறான் அவசியம் போய் பார் என்றான். நிச்சயம் பார்க்கிறேன் . ஷிவானி நீ அவசியம் அவனை பார்க்க வேண்டுமா என்றாள். வேறு வழியில்லை. என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போமே. ஆனந்த் சற்றே இளைத்தவனாக இருந்தான். இவனை பார்த்ததும் மகிழ்வுடன் சிரித்தான். என் மேல் உள்ள எல்லா கேசும் நீயும் உன் மனைவியும் போட்டவைதான் என்றான். ஆனா