யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . எப்படியாவது உன்னை டாக்டர் ஆக்கி பார்க்கணும் அப்படிங்கிறது கமலனோட கனவா இருந்தது என்றாள். இருவருக்கும் டீ கொடுத்தாள் . எழிலை யாழினிக்கு அறிமுகம் செய்து வைத்தான் உதித். பசங்க ஸ்கூல் போயிருக்காங்க என்றாள். ஹஸ்பண்ட் இறந்ததற்கு பிறகு எல்லாமே கமலன் தான் ஹெல்ப் பண்ணினாரு . இப்போ நாங்க மறுபடி ஆதரவு யாருமில்லாம ஆயிட்டோம் என்றாள். எழில் கமலன் மரணம் குறித்து யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என விசாரித்தான். இன்ஸ்பெக்டர் கிரண் மேலதான் எனக்கு முன்னாடி சந்தேகம் வந்துச்சு. ஆனா அவன் பின்னாடி அந்த சௌமியாதான் இருக்குறாள். கிரண் வெறும் இடைத்தரகர்தான். அவளுக்கும் அவருக்கும் அரசியல் ரீதியா ஒத்து வரலை. ஏதோ அவள் பெரிய பதவிக்கு வருவதை இவர்தான் தடுத்து விட்டதா நினைத்து