ஒரு நாளும் உனை மறவேன் - Part 16

  • 480
  • 132

மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் உதித். ஷெரின் ஒன்றும் பேசாமல் போனை வைத்தாள் .ஸ்வேதாவும், சிவாவும் அவன் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான் இப்போதைக்கு அவனை அப்படியே விட்டு விடு என்று சொன்னார்கள். ஷெரின் எல்லாம் என்னால் வந்த வினை. ஆள் தெரியாமல் ஆனந்த் மாதிரி ஒருத்தனை நண்பனாய் நினைத்ததற்கு எத்தனையோ உயிர்களை பலி கொடுத்தாயிற்று என்றாள். அப்போது நிர்மலாவிடம் இருந்து சிவாவுக்கு ஃபோன் வந்தது. எத்தனை நாளைக்குத்தான் ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பீர்கள். அவளை கோர்ட்டில் சரணடைய சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள். நாங்கள் அவளிடம் பேசிவிட்டு நல்ல முடிவா சொல்லுறோம் என்றான் சிவா. எழிலுக்கும் நாளுக்கு நாள் பிரஷர் அதிகரித்து வந்தது. வேறு வழியில்லாமல் ஷிவானியின் கால் லிஸ்ட் சோதித்தான். அவளது பெயரில் இன்னொரு சிம் நம்பர் இருப்பதை