ஒரு நாளும் உனை மறவேன் - Part 14

  • 222
  • 51

ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ல ஷெரினோட நிலைல இருந்து யோசிச்சுட்டேன். இப்போ எனக்குத்தான் தலைவலி என்றான் எழில். எனக்கொரு முடிவு சொல்ல மாட்டேங்குறீங்க ? இப்போ அதுதான் ரொம்ப முக்கியம். ஆமா எனக்கு அதுதான் முக்கியம். சரி நான் ஐஜி ஆபீஸ் வர போக வேண்டியிருக்கு. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு என்றான். ஷெரினை பிடிக்க புதிதாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன கூடவே கமலனை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பது யார் என்ற கேள்வியே மிஞ்சி நின்றது. அதற்கு விடை ஸ்வேதாவிடம் இருந்தது. ஷெரின் கொஞ்ச நாளைக்கு என் கசின் ஒருத்தன் ஆந்திராவுல இருக்கான் அங்க போய் இரேன் என்றாள் ஸ்வேதா. இங்க போலீஸ் தொந்தரவு அதிகமா இருக்கும். ம் எனக்கு ஓகே தான். என்னால