ஷெரின் உனக்கு என்னதான் வேணும் என்று எழில் கேட்டான். இப்போதைக்கு இவனை கொல்லாம விடுறேன் அந்த முக்கிய புள்ளிகள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி குடுப்பீங்களா எழில் சார். நிச்சயமா ஷெரின். சேகர், சுமதி, திலகவதி இவங்க சாவுக்கு காரணமான இவனுக்கும்ஆனந்துக்கும் தண்டனை வாங்கி தாங்க அது போதும் என்றாள். கமலன் உன்னை வார்ன் பண்ணி இத்தோட விடறேன். எனக்கு சட்டத்து மேல நம்பிக்கை இருக்கு என்றாள் ஷெரின். கமலனை அரை மயக்க நிலையில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வாசலில் கண்டெடுத்தார்கள் போலீஸ் . கண் விழித்ததும் போலீசார் அவனை அரெஸ்ட் செய்தனர். என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணுறீங்க ? அவ சொன்னா உடனே நம்பி விடுவீர்களா . இல்லை உங்களை விசாரிக்கணும்னு மேலிடத்து ஆர்டர். அடுத்து யார் கடத்தபடுவார்களோ என்ற எண்ணம் பரவலாக பேசபட்டு கொண்டிருந்தது. அதற்குள் ஷெரீனை கைது செய்ய உயரதிகாரியிடம் இருந்து பிரஷர் வந்து கொண்டிருந்தது. எழில் திரும்ப சென்னைக்கு