ஒரு நாளும் உனை மறவேன் - Part 11

  • 639
  • 174

துப்பாக்கி குண்டு காயமடைந்த எழிலை ஹாஸ்பிடலில் சேர்க்கிறாள் ஷிவானி. எழில் உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் துடித்து போகிறாள் ஷிவானி. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து போனார்கள். கமலனின் திட்டப்படி எழிலின் பொறுப்புகள் எல்லாம் வேறு ஒரு ஆபீசரிடம் மாற்றப்பட்டது . எழில் வேதனையுடன் ஷிவானியிடம் இதை சொன்னான். நீங்க முதல்ல ஓய்வெடுங்க எழில் உங்க உடம்பு சரியானதும் எல்லாம் பழைய நிலைக்கு வந்து விடும் என்றாள் ஷிவானி. அன்னைக்கு நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க அது என்னன்னு சொல்லலியே என்றான். அதை அப்புறமா சொல்லுகிறேன் என்றாள். சிவா, ஸ்வேதா, நிர்மலா ஆகியோரும் அவனை வந்து பார்த்தனர். வருத்தபடாதீங்க எழில் அந்த கமலன் வேலைதான் இது என்றான் சிவா. மேலும் சில ரகசியமான வேலைகளை கமலன் நீலாங்கரைல இருக்கிற தன்னோட பங்களாவுல செய்யுறதா தகவல் இருக்கு என்றான் சிவா. நான் இப்போ இருக்கிற நிலமைல ஒண்ணும் செய்ய முடியாது ஷிவானி கிட்ட