விடிந்ததும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்வேதா சாரி ஏதோ அசதில அப்படியே தூங்கி போயிட்டேன் . சரி குளிச்சு ரெடி ஆகு நாம கோவிலுக்கு போகலாம். சரி ஸ்வேதா, கடவுள் சந்நிதானத்தில் நாங்க எந்த தப்பும் செய்யல சீக்கிரம் ஸ்வேதாவை கல்யாணம் பன்னிக்கணும் என்று வேண்டிக்கொண்டான் . சேகர் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. சேகர் தலைமறைவாய் இருப்பதை பற்றி கவலையாய் இருந்தது சிவாவுக்கு . ஸ்வேதாவிடமும் சொன்னான்.ஆனந்த் விஷயத்துல என்ன நடந்திருக்கும்னு என்னால கணிக்கவே முடியல.. சிவா நீ அனாவசியமா பயப்படுறே என்றாள் ஸ்வேதா.இரண்டு நாட்கள் கழித்து சேகர் ஃபோன் செய்தான். அவசரம் நீ உடனே புறப்பட்டு ஹோட்டல் ஜெயண்ட்க்கு வந்துடு என்று சொன்னான். சேகர் இளைத்து போயிருந்தான். அவனுடைய கண்கள் தூக்கத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன. என்ன நடந்துச்சு ஏன் இப்படி இருக்கே உடம்பு சரியில்லையா என கேள்விகளை அடுக்கினான் சிவா. எனக்கு ஒண்ணும் இல்ல. அன்னைக்கு ஆனந்த்