ஒரு நாளும் உனை மறவேன் - Part 6

  • 360
  • 117

வெளியே யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது அவசரமாக இருவரும் வெளியேறினர். சிவா அந்த டைரியை புரட்டினான் . அது சுமதியின் டைரிதான். என்னை ஆனந்த் ஏமாற்றினான். ஆனால் அரவிந்த் துரோகம் இழைத்து விட்டான் என்று எழுதப்பட்டு இருந்தது . அரவிந்த் எதுவும் தெரியாதது போல நடிக்கிறானா என சிவா யோசிக்கும் வேளையில் அரவிந்த்திடம் அந்த டைரியை குடுத்தான். அரவிந்த் எதுவும் பேசவில்லை . சரி சிவா நானே இனி இந்த விவகாரத்தை பார்த்து கொள்கிறேன் எனக்காக இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுத்ததற்கு நன்றி என்றான். சிவா குழம்பியவாறு விடைபெற்றான். சிவா வீட்டுக்கு வந்தபோது ஸ்வேதா கிச்சன் உள்ளே சமைத்து கொண்டிருந்தாள். சிவா நடந்ததை சொன்னான். சரி சிவா போனது போகட்டும் குளித்துவிட்டு வந்து சாப்பிடு என்றாள். சிவா சாப்பிடும் போது அவளுக்கும் ஊட்டி விட்டான். அரவிந்த் என்பவர் மர்ம நபர்களால் கடத்தல் . போலீஸ் காரணம் தெரியாமல் திணறல் என்ற