வாட்ச்மேன் அவங்க ஊருக்கு போயிருக்காங்களே .. இல்லைனா அவங்களுக்கு ஃபோன் பண்ணி பாருங்களேன் என்றார் . ஃபோன் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. அவங்க ஹஸ்பண்ட் சமீபத்துலதான் காணாம போனாரு அதனால ரொம்ப மன உளைச்சலோட இருந்தாங்க. உள்ளே லைட் எரிவது போல தெரிந்தது. நாம போலீஸ் கிட்ட போகலாம். அதெல்லாம் வேணாம் சார் அசோசியேஷன் செகரெட்டரி கிட்ட இன்னொரு கீ இருக்கு அதை வைத்து திறந்து பார்ப்போம் என்றார், சுமதி மேடம், மேடம் என கூப்பிட்டு கொண்டே உள்ளே போனார். அங்கே சுமதி தூக்கில் தொங்கியவாறு இருந்தாள் அரவிந்த்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான் சிவா. போலீஸ், ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டது .போலீஸ் சிவாவையும், ஸ்வேதாவையும் தனி தனியே விசாரித்தனர் . பிறகு எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும் என்றனர். அரவிந்த் தடுமாறி போனார், சிவா தான் அவருக்கு ஆறுதல் கூறினான். இதுக்கு மேல நீங்க எதுலேயும் involve ஆகாதீங்க சிவா