ஒரு நாளும் உனை மறவேன் - Part 3

மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் ஸ்வேதா. என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . நிச்சயமா இல்லை என்றான்நான் வேணா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா சேகருக்கு ஃபோன் செய்தான். நானே உன்னை கூப்பிடுறேன் இப்போதான் பாட்டில் ஓபன் பண்ணியிருக்கான் ஆனந்த். ஆனந்த் நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன் ஸ்வேதா கர்ப்பமாயிருக்கா நான் அப்பாவாகிட்டேன் என்றான் சேகரிடம். சாரி சேகர் உங்க கிட்ட எல்லாம் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் . அதெல்லாம் பரவாயில்லப்பா .. சரி வா குடிச்சது போதும் இங்கே பக்கத்துல ஒரு ஹில் டாப் இருக்கு அங்கே போவோம். ரம்யா வரல? அவளுக்கு லேசா தலைவலி அதான் வரல என்றான். சரி அவளை ஒருதடவை பார்த்திட்டு போயிடலாம் என்றான் ஆனந்த். ரம்யா ரூமுக்கு போய்