ஒரு நாளும் உனை மறவேன் - Part 2

ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி ஆனந்த். இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க . எல்லாம் எனக்கு தெரியும் உன்னைபற்றி என்றவாறு போனை வைத்தான் ஆனந்த். இரண்டு நாட்கள் கழித்து சேகருக்கு ஃபோன் செய்து விசாரித்தான். என்னாச்சு சேகர் அரவிந்த் ஊரில் இருந்து வந்துவிட்டாரா? ம் வந்துட்டாரு நானே உனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைச்சேன் . நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவரு ஆபீஸ் ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு நீயும் வரியா என்றான். சரி வரேன். ஒருவேளை ஆனந்தும் வந்து பிரச்சனை ஆயிடுமோ அப்படின்னு யோசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதப்பா நீ சும்மா வா . சேகரும், சிவாவும் அரவிந்தின் ஆபீஸ் வந்திருந்தார்கள். எதிர்பார்த்த மாதிரி