இரவை சுடும் வெளிச்சம் - 30

  • 594
  • 189

ராம் தீபுவிடம் அந்த டைரி பற்றி கேட்ட போது அவள் சொன்ன விஷயம் அதிர்ச்சியாய் இருந்தது. ரேவந்த் ராகவனுடைய மகனே இல்லை எனவும் ரேவந்த்தின் தந்தை யாரென தெரியவில்லை எனவும் எழுதி இருந்தார். ஆனால் அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவனுடைய எதிர்காலமே பாதிக்கப்படும். பார்வதி எனக்கு செய்த துரோகத்துக்கு அவளுக்கு காலமே தண்டனை வழங்கட்டும் என்று எழுதி இருந்தார்.ரேவந்த் பிறந்த போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் தனக்கு தெரியாமல் நாடகம் ஆகிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதனால் எனக்கு பிறகு என்னுடைய எல்லா சொத்துக்களும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு போகட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த விஷயம் எப்படியோ ஆனந்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் மூலமாக சம்பந்தப்பட்ட ஆளுக்கு தெரிந்திருக்கிறது. ராம் இந்த விஷயத்தை ரேவந்த்திடம் எப்படி சொல்வதென யோசித்தான். வேண்டாம் முதலில் இதற்கான ஆதாரங்களை திரட்டுவோம் ரேவந்த்தின் தந்தை யாரென தெரிந்து கொள்வோம் என முடிவெடுத்தான். ரேவந்த் பிறந்த ஹாஸ்பிடலை தீப்தியிடம் கேட்டு