போலீஸ் ஆபீஸர் ராகவன் மர்ம நபர்களால் வெட்டி கொலை என்ற செய்தியை ராம் படித்துக்கொண்டிருந்தான். இவர் தீப்தியுடைய நெருங்கிய உறவினர் ஆச்சே என்று யோசிக்கும் போதே தீப்தியிடம் இருந்து போன் வந்தது. நாங்க 10 மணிக்கு வந்துடுவோம் . வந்து நேர்ல பேசுறோம் என கூறினாள். ராம் மேலும் படித்த பொது retired போலீஸ் ஆபீஸர் ஆன ராகவன் அடுத்த வாரம் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிடுவதாக இருந்த நிலையில் கொலை .தீப்தி சொன்ன மாதிரி வந்துவிட்டாள் கூடவே ரஞ்சித்தும் ஒரு பையனும் வந்திருந்தான். அவனுக்கு ஒரு 20 வயதிருக்கும். அவன் மிகுந்த துக்கத்தில் இருப்பதாக ராமுக்கு தோன்றியது. என்னாச்சு தீப்தி எப்படி இப்படி திடீர்னு ? அதான் எங்களுக்கும் ஒன்னும் புரியல. இவன் அவர் பையன்தான் பேரு ரேவந்த்.என்ன காரணம்னு தெரியல. போலீஸ் விசாரிச்சப்ப ஆள் மாறி மணிமாறன் என்பவரை வெட்டுவதற்கு பதிலாக இவரை வெட்டிட்டோம்னு சொல்றாங்களாம். சரி