ராமுக்கு எல்லாம் புரிந்தது போல இருந்தாலும் எதுவும் புரியவில்லை. நவீனா தன்ராஜை விரும்பியிருக்கிறார் இது சாதாரண விஷயம். ஆனால் என்னிடம் அதை ஏன் மறைத்தாள் என்று யோசித்தான்.இந்த நிலையில்தான் சாரதியிடமிருந்து போன் வந்தது.சார் உங்களை மீட் பண்ணணுமே.. என்ன விஷயமா ?தன்ராஜ் accident விஷயமா . அப்படியா நாம இப்போவே மீட் பண்ண முடியுமா .. வேண்டாம் சார் நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு மீட் பண்ணலாம்.நான் டிரைவிங்கில இருப்பேன் அதனாலே நானே உங்களுக்கு போன் பண்ணுறேன் என்றான்.இவன் என்ன விஷயம் சொல்ல போகிறானோ என்ற தவிப்பு இன்னும் அதிகமானது.மறுநாள் சாயங்காலம் வரை போன் வரவில்லை. அந்த ஹாஸ்பிடலுக்கு சென்று விசாரித்த பொது சாரதி ரெண்டு நாட்களுக்கு முன்பு வேலையை resign செய்து விட்டதாக சொன்னார்கள்.தேவி அங்கேயே பணிபுரிந்து வந்தாள். தேவியிடம் விசாரித்த போது என்னவோ லாட்டரி அடிச்சது போல குதிச்சான் சார்.நிறைய பணம் வந்த மாதிரி பேசினான்.அதுக்கப்புறம் அவனை ஆள