இரவை சுடும் வெளிச்சம் - 27

  • 273
  • 90

தீப்தி கார் ஓட்டும் அழகை ரஞ்சித் புகழ்ந்து தள்ளினான். என்ன ஓவர் புகழ்ச்சியா இருக்கே என்றாள். நீ யார்கிட்ட வண்டி ஓட்ட கத்துகிட்ட. அதுவா தன்ராஜ் மாஸ்டர்ன்னு ஒருத்தர்கிட்ட. ம்ம் உண்மையிலே அது நல்ல டிரைவிங் ஸ்கூல் தான் போலிருக்கு என்றான்.ரஞ்சித் அவரை பார்த்து ரொம்ப நாள் ஆகுது ஒரு நாள் போய் பார்த்துட்டு வருவோம் வரியா? ஆரம்பிச்சுட்டியா சரி போவோம் ஆனா அங்க வந்து என் டிரைவிங் ஸ்கில்ஸ் பத்தி பேசக்கூடாது ஓகே பேசமாட்டேன். இப்போ போன் பண்ணி கேளேன் எப்போ பாக்கலாமுனு ? சரி கேக்குறேன். ஹாய் சார் எப்படி இருக்கீங்க . சொல்லுமா ..நான் நல்லா இருக்கிறேன் .வண்டியை இடிக்காம ஓட்டுறேயில்லை?மாஸ்டர்.. சும்மா கிண்டலுக்கு சொன்னேன்மா எப்படியிருக்குற? உன் husband ரஞ்சித் எப்படி இருக்குறாரு . அவர் நல்லா இருக்குறாரு. இந்த weekend உங்களை பாக்க வரலாம்னு இருக்கோம் மாஸ்டர். உங்களுக்கு ஏதும் ஒர்க் இருக்கா ?