ராகுல் வீட்டுக்கு போய் விசாரித்த போது அவர்களும் இடம் மாறி இருந்தார்கள்.மேரியும் இடம் மாறி இருந்தார்கள்.அவர்களை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.ராம் சென்னை திரும்பினான். ரத்தினத்திடம் ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லும்படி சொல்லி கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விட்டு வந்தான் .இது நடந்து ஒரு வாரம் ஆகியும் ரத்தினத்திடமிருந்து பதில் இல்லை. நேரில் போய் பார்க்கலாம் என முடிவெடுத்தான் . போனை முதலில் எடுக்காத ரத்தினம் சிறிது நேரம் கழித்து எடுத்தான்.. சார் அவன் இங்கதான் இருக்கான் ..யாரு? ராகுல் அப்படியா அதுக்கு ஏன் பயப்படுறீங்க ஆளே மாறிட்டான் சார்.எனக்கு என்னவோ பயமா இருக்கு சார் அவன் நம்பர் நோட் பண்ணிக்குங்க சார். ராகுலுக்கு போன் போட்டான். என்ன சார் என்ன விஷயம் நான் உங்களை பார்க்கணுமே என்ன விஷயமா ? இளங்கோ டீச்சர் விஷயமா . எனக்கு நெறைய வேலை இருக்கு நானே கால் பண்ணுறேன் என்றான். ரத்தினம் எதையோ