இரவை சுடும் வெளிச்சம் - 21

  • 288
  • 72

தீப்தியும் ரஞ்சித்தும் ஸ்னேஹாவின் பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தனர்.சினேகா தீப்தியின் நெருங்கிய தோழியின் மகள். சினேகா கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள். மிக அருமையாக keyboard வாசித்து காண்பித்தாள் .எல்லோரும் சினேகா துல்லியமாக வாசித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சினேகா 5 வது படித்து வந்தாள். ஒரு சிலர் யார் அந்த keyboard மாஸ்டர் என கேட்டு அட்ரஸ் வாங்கிக்கொண்டனர்.பர்த்டே க்கு சற்று தாமதமாக அந்த மியூசிக் மாஸ்டர் வந்து விட்டார். சாரி மா கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு என்றார். மறுபடி ஒருமுறை அவருக்காக keyboard வாசித்து காட்டியபோது ரஞ்சித் பெரிதும் மாஸ்டரை பாராட்டினான். தன் பெயர் ராமநாதன் என்றும் சொந்தமாக மியூசிக் அகாடமி வைத்திருப்பதாக சொன்னார். அவருடைய விசிட்டிங் கார்டை வாங்கி வைத்துக்கொண்டான் ரஞ்சித். ரொம்ப நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காரு என்று தீப்தி சொன்னாள். நீயும் வேணா மியூசிக் கிளாஸ் போறியா ஆனா பாட மட்டும் செஞ்சுடாதே என்று கிண்டலாக சொன்னான்