இரவை சுடும் வெளிச்சம் - 18

  • 177
  • 66

போலீஸ் ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தனர். ராம் அந்த ஏரியாவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிதியின் போட்டோவை காட்டி விசாரித்தான். அப்படி யாரையும் பார்க்கவில்லை என சொன்னார்கள். அருகிலுள்ள பார்க் உள்ளிட்ட இடங்களிலும் விசாரித்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதே சமயம் பிரேமா கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வந்தது.பிரேமாவுடைய வீட்டை மறுபடி பார்வையிட்டான் ராம். சம்பவம் நடந்த அறையில் எல்லாம் சிதறி கிடந்தன. போலீஸ் அந்த அறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.அதிதியின் அப்பா திலகிற்கு போன் செய்து விசாரித்தான்.அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிவிட்டதாக சொன்னார்கள். ரஞ்சித்தையும் ,தீப்தியையும் திவாரி வீட்டுக்கு அனுப்பியிருந்தான் ராம். அவர்கள் திவாரியை சந்தித்தனர்.குழந்தை காணாமல் போனது பற்றி எனக்கும் தியாவுக்கும் எதுவும் தெரியாது . வீணாக எங்களை சந்தேகப்படாதீர்கள். திவாரி வீட்டையும் போலீஸ் ஏற்கனவே சோதனை செய்திருந்தது. திவாரி சிறியதொரு fancy ஸ்டோர் வைத்திருந்தான். தற்போது அந்த வீட்டில் வசிக்காமல் தனியாக வீடெடுத்து