ராமை பார்த்ததும் ரஞ்சித் உற்சாகமடைந்தான். சார் அந்த ஆளுங்களை விடக்கூடாது சார். அத நான் பாத்துக்கிறேன். நீங்க ஊருக்கு கிளம்புங்க. அதெல்லாம் வேணாம் சார். இந்த கேஸ் முடியற வரை நாங்க உங்க கூடவே இருப்போம் . ம்ம் அப்போ ஒரு முடிவோடதான் இருக்கீங்க .. என்றபடி ராம் சிரித்தான். சரி போய் ரெஸ்ட் எடுங்க நான் அந்த லேடி லலிதா கூட பேசிட்டு வரேன். ஓகே சார். ராம் லலிதாவை தான் தங்கியிருந்த ஹோட்டல் அருகிலிருந்த ரெஸ்டாரன்ட்டுக்கு வர சொன்னான். நேரம் ஆகியிருந்தது. அவள் வரவில்லை. போன் சுவிட்ச் ஆப் என்று சொன்னது போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விசாரித்த போது அவள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக சொன்னார்கள். லலிதா தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் சேர்ந்த போது மணி இரவு 10 ஆகி விட்டிருந்தது . reception இல் இருந்து பேரை சொல்லி விசாரித்தான். இப்போதான் உள்ளே போனாங்க .