தீப்தி அன்று ஆபீசுக்கு லீவு சொன்னாள். காலை எட்டு மணிக்கு போன் வந்தது .தீப்தி பணம் ரெடி பண்ணிட்டியா ? ரெடி பண்ணிட்டேன், அப்போ egmore ஸ்டேஷனுக்கு வந்துட்டு கால் பண்ணு, தீப்தி egmore ஸ்டேஷனுக்கு பணத்தோடு போனாள். நீ இப்போ பிளாட்பாரம் நம்பர் 1 க்கு போ . அங்க இருக்குற டஸ்ட் பின் ல பையை போடு .பணம் சரியாய் இருந்தால் மீனாவை அனுப்பறேன். ரெண்டு நாள் கழித்துதான் டிரைவரை அனுப்புவேன். அதுக்குள்ள நீ போலீசுக்கு போகாம இருக்கணும் என்றது அவள் போனில் வந்த மெசேஜ். தீப்தி அவர்கள் சொன்னபடியே செய்தாள்.கண்கள் கட்டிய நிலையில் கைகள் பின்புறம் கட்டப்பட்டவாறு மீனா வந்து சேர்ந்தாள். ரொம்ப தேங்க்ஸ் தீப்தி எனக்காக எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க என்று மீனா சொன்னாள். அடுத்த ரெண்டு நாளில் டிரைவர் ரமேஷும் வந்து சேர்ந்து விட்டான். ஆபீசில் ஏதோ பொய் சொல்லி சமாளித்து விட்டாள்