தீப்தி ஒரு லாங் டிரைவ் போலாமா என்றாள். இந்த நேரத்துலயா ?ப்ளீஸ் ப்ளீஸ் என்றாள். சரி வா போவோம் உன் விருப்பம்தான் என் விருப்பம் என்றான். மிதமான வேகத்தில் காரை செலுத்தினான். தீப்தி தன் செல்போன் கேமராவால் ஜன்னல் வழி வீடியோ எடுத்துக்கொண்டே வந்தாள். இவர்களை மின்னல் வேகத்தில் கார் ஒன்று ஓவர் டேக் செய்தது. ஒரு கணம் தடுமாறினாலும் சுதாரித்து கொண்டான். தீப்தி தன்னை மறந்து இயற்கை அழகை படமாக்கி கொண்டு இருந்தாள். இவனை ஓவர் டேக் செய்த கார் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தது .கொஞ்சம் குறைவான ஸ்பீடில் வண்டியை செலுத்தினான். அப்போதுதான் அதை கவனித்தான். இரண்டு பேர் காருக்கு வெளியே சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். ஒருவன் மற்றொருவன் கழுத்தில் கை வைத்து தள்ளிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென காரில் அமர்ந்திருந்தவன் வெளியே சண்டை போட்டவனை நோக்கி சுட்டான். அவன் சுருண்டு விழுந்தான் . வேகமா காரை எடு என காருக்குள் இருந்தவன்